பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜோர்டான் ,எத்தியோப்பியா ,ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். முதலில் அவர் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹீசைனின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் வலுப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகளை நிறைவு பெறும் நிலையில் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. மறுநாள் எத்தியோப்பியாவுக்கு செல்லும் பிரதமரின் முதல் பயணம் இது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் அபி அகமது அலியுடன் விரிவான ஒரு பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளார். அங்குள்ள பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திலும் உரையாட உள்ளார். இதனைத் தொடர்ந்து ஓமன் நாட்டு அதிபர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கின் அழைப்பின் பேரில் அங்கு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் ,முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கும் முகமாகவும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மூன்று நாடுகளில் உள்ள இந்திய வம்சா வழியினருடனும் பிரதமர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.