
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான கம்சஸ்கியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.7 புள்ளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான், ரஷ்யா, அமெரிக்காவின் ஹவாய் கடலோர பகுதிகளில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.