
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் நகை திருடியதாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசாரால் அழைத்து செல்லப்பட்டு விசாரணை என்ற பெயரில் தனிப்படை போலீசார் சித்திரவதை செய்ததில் அவர் உயிரிழந்தார்.போலீசாரின் சித்திரவதை விடியோக்காட்சியாக வெளியானது நாட்டில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.மேலும் சாத்தான் குளம் சம்பவத்திற்குபின்னர் இச்சம்பவம் நடுமுழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 30) எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமார் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் தாய் மற்றும் தம்பியை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.