Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மானம் காத்த தமிழக வீரர் ஷாருக்கானை பாராட்டிய ப்ரீத்தி ஜிந்தா !

by Others

மானம் காத்த தமிழக வீரர் ஷாருக்கானை பாராட்டிய  ப்ரீத்தி ஜிந்தா !

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்ஸ்மன்கள் சிஎஸ்கே பவுலர்களின் சூழ்ச்சியில் சிக்கி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். சிஎஸ்கே பவுலர் தீபக் சஹார் பஞ்சாப் பேட்ஸ்மன்களை திணற வைத்தார்.
இவர் தனது பந்துவீச்சின் மூலம் மயங்க் அகர்வால், கெயில், பூரன், தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட் எடுத்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தமிழக வீரர் ஷாருக்கான் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே பவுலர்கள் தீபக் சஹார் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்து இருக்கின்றனர்.
இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவரிலே இலக்கை எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர். இதில் டூபிளெசிஸ் 36 ரன்களும், மொயின் அலி 46 ரன்களும் அடித்து இருக்கின்றனர். பஞ்சாப் சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த போட்டியில் பஞ்சாப் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த போது தமிழக வீரர் ஷாருக்கான் மட்டும் தனியாளாக நின்று 36 பந்தில் 47 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்.
இவர் மட்டும் இந்த ரன்களை அடிக்கவில்லை என்றால் முதல் போட்டியில் 200க்கு மேல் அடித்த பஞ்சாப் அணி இந்த முறை 60 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். பஞ்சாப் அணியின் மானம் காத்த தமிழக வீரர் ஷாருக்கானை அனைவரும் பாராட்டி வருகின்றனர். போட்டி முடிந்த பின் தோனி இவருடன் அமர்ந்து பேசியிருக்கிறார்.
இந்நிலையில், பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ஷாருக்கானின் ஆட்டத்தை கண்டு வாழ்த்தி இருக்கிறார். அவர் தனது ட்விட்டரில் 'இது எங்களுக்கான இரவாக இல்லை. ஆனால் இதில் சில பாசிட்டிவ் இருக்கிறது.
தமிழக வீரர் ஷாருக்கான் இக்கட்டான சூழ்நிலையில் சூப்பராக விளையாடினார் மற்றும் பந்துவீச்சாளர்கள் முன்பை விட சிறப்பாக விளையாடினார்கள். இதை மறந்து விட்டு நாங்கள் முன் நோக்கி செல்ல இருக்கிறோம். இந்த இரவில் நாங்கள் பலவற்றை கற்றுக்கொண்டோம். சிஎஸ்கே சிறப்பாக விளையாடியது' என்று ப்ரீத்தி ஜிந்தா ட்விட் செய்திருக்கிறார்

Share via