Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள்

by Editor

தமிழர் உலகம்
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு பணிகள் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று துவங்கின.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876ம் ஆண்டு முதன்முதலில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதன்பின் கடந்த 1903 மற்றும் 1904ம் ஆண்டுகளில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் சத்தியமூர்த்தி குழுவினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது 600 சதுர மீட்டர் அளவில் அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் 160க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று அகழாய்வு பணி துவங்கியுள்ளது. இதனை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்துள்ளார்.

திருச்சி தென்மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அகழாய்வு பணிகள் 3 மாதங்கள் நடைபெற உள்ளன.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஆய்வு பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 17 கோடி போதுமானதாக இருக்காது. எனவே மத்திய அரசு இந்த தொகையை உயர்த்தும் என நம்புவோம் என தெரிவித்தார்.

Share via

More Stories