Advertiment

பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரி ரோடு ஷோவில் பங்கேற்பு

by Admin

தமிழகம்
பிரதமர் நரேந்திரமோடி புதுச்சேரி ரோடு ஷோவில் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரியில் பிரம்மாண்ட ரோடு நடத்தினார். மாலை நாலு பதினைந்து மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் அங்கிருந்து ரோடு தொடங்கும் இடத்திற்கு சென்றார் . புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாய மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் திறந்த வாகனத்தில் அவருடன் சென்றனர்.

அஜந்தா சந்திப்பில் தொடங்கி அண்ணாச்சாலை வழியாக சுமார் 1.2 கிலோ மீட்டர் தூரம் கடந்து காமராஜர் சிலை ராஜா திரையரங்கம் அருகே நிறைவடைந்தது. ரோடு சோவின் போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவி பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டு பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். ரோடு ஷோவின் போது பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. பிரதமரின் வருகையை ஒட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Share via
Advertiment

More Stories

Ads