சென்னை சேப்பாக்கம் எம். ஏ .சி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் ஜிம்பாப்பே அணிக்கும் இடையிலான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.. டாஸ் வென்ற ஜிம்பாப்பே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்பே அணி 257 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது. இந்திய அணியின் பந்து வீச்சு பில்டிங்கில் பெரும் முயற்சி எடுத்து ஜிம்பாப்பே 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..