Advertiment

தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin

விளையாட்டு
தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 26 ரன்களுக்குள்ளே இரண்டு, மூன்று விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவும் என்கிற நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வரக்கூடிய நிலையில் டேவிட் மில்லரும் ,தி வால்ட் ப்ரீவிஸ் இருவரும் அணியின் வெற்றிக்கு துணை நின்றனர். 20 ஓவரின் ஏழு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு இந்தியாவை களம் இறக்கியது. இந்திய அணி வெற்றி பெறலாம் என்கிற எண்ணத்தோடு களம் இறங்கி பூஜ்ஜியத்தில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வீரர்கள் அவுட்டாகி... இந்திய அணி வெற்றி பெறாது என்கிற ஒரு நிலையை உருவாக்கி... இறுதியில்18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் எடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. இதன் மூலம் அரை இறுதிக்குள் இந்தியா செல்லுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படியானாலும் மற்ற அணிகள் வெற்றிகளை இழந்தால் மட்டுமே முடியும்.

Share via

More Stories