Advertiment

பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் .

by Admin

விளையாட்டு
பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் .

உலகக் கோப்பை டி20 போட்டியில் கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டியை புறக்கணிக்க போவதாக பாகிஸ்தான் முதலில் அறிவித்திருந்தது. வங்கதேச அணி போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவாக இந்த முடிவை பாகிஸ்தான் எடுத்திருந்தது. இருப்பினும் ஐசிசி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் சில முக்கிய நிபந்தனைகளை வைத்துள்ளது. இந்தியாவுடன் மீண்டும் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை தொடங்க வேண்டும் என்றும் இந்தியா பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் பங்கேற்கும் மும்மனை தொடரை நடத்த வேண்டும் என்றும் ஐசிசி வருவாயில் பாகிஸ்தானுக்கு அதிக பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் 2026 இல் இந்தியா வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை ஐசிஐசிஐ உறுதி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. இந்த கோரிக்கைகளில் பலவற்றை ஐசிசி நிராகரித்தது வங்கதேசம் மற்றும் இலங்கை நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது அதன்படி பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share via

More Stories