இன்று காலை 10:30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுககட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 20026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியின் தேர்தல் பணிகள் மற்றும் களப்பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படுகின்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆதிமுக தேர்தலை சந்திப்பது குறித்தும் தொகுதி பங்கீடு மற்றும் உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்தும் ஆலோசனை நடத்தலாம் என்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் விடியல் ஆட்சி ,உங்கள் வீட்டுப் பில்லே சாட்சி போன்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தேர்தல் பணிகளில் தொடக்கம் காட்டும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த உள்ளதாகவும் தகவல்.