இன்று இரவு 7.00 மணிக்கு விசாகப்பட்டினம் டாக்டர் ஒய். எஸ் .ஆர். கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையேயான டி20 நான்காவது போட்டி இன்று நடைபெறுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று வெற்றிகளை பெற்ற இந்திய அணி முன்னணியில் உள்ளது. நான்காவது போட்டியிலும், இந்திய அணியே வெல்லும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. நான்காவது, ஐந்தாவது போட்டியில் இந்தியா வென்றால், நியூசிலாந்து 0 என்கிற கணக்கிலேயே தன் நிலைப்பாட்டை கொண்டு செல்லும். வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கும் நிலையில் ,இந்திய கிரிக்கெட்அணி இந்த வெற்றிகளின் மூலம் தன்னை பலப்படுத்திக் கொண்டு வருகிறது.