இன்று மத்திய பிரதேச இந்தூரில் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியும் மோதும் மூன்றாவது ஓ.டி. ஐ கிரிக்கெட் போட்டி மதியம் 1.30 மணிக்குநடைபெறுகிறது. இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருப்பதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது இதில் எந்த அணி வெற்றி பெரிமோ அந்த அணிக்கு மட்டும் கோப்பை என்கிற நிலையில் இரு அணிகளும் களத்தில் தீவிரமாக வெற்றிக்காக போராடும். இருப்பினும் கருத்துக் கணிப்பின்படி இந்திய அணி வெற்றி பெறும் என்று 76% நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்று 24 விழுக்காடு கணிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ப்போட்டியில் இந்தியா வென்றால் கோப்பை நம் வசமாகும்.