திருவனந்தபுரம் கிரீன் பீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் டி20 நான்காவது போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. டாஸ் என்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை எடுத்தது. 222 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு கலந்து கொண்ட இலங்கை அணி 20 ஓவரின் ஆறு விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி இலங்கை அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி நாலு போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது..