இன்று இரவு ஏழு மணிக்கு இந்திய கிரிக்கெட் அணியும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் மோதும் ஐந்தாவது டி20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியில், இந்திய அணி வெல்லும் என்று 69 விழுக்காடு கருத்துக் கணிப்பும் 31 விழுக்காடு தென்னாப்பிரிக்கா அணி வெல்லும் என்கிற கணிப்பும் வெளியாகி உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று உள்ளது. ஒரு போட்டியில் தென்னாபிரிக்க அணி வென்றுள்ளது. கடும் பனிபொழிவின் காரணமாக நான்காவது போட்டி ரத்து செய்யப்பட்டதால், இன்று ஐந்தாவது போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஐந்துக்கு மூன்று என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். மாறாக, தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இரண்டுக்கு இரண்டு சமம் என்கிற கணக்கில் வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படும்.