
உ.பி: ஜிடி சாலை நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீபக் சவுகான் என்பவர் தனது குடும்பத்துடன் ஆக்ராவிலிருந்து சிப்ரமௌவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், தீபக் (36), அவரது மனைவி பூஜா (34), மகள்கள் ஆஷி (9), ஆர்யா (4) மற்றும் சகோதரி சுஜாதா (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.