
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தனது பட்டாலியன் தலைமையகத்திலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஜவான் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (ஜூலை 31) இரவு நேரத்தில் நடந்துள்ளது. காணாமல் போன வீரர் சுகம் சவுத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் 60வது பட்டாலியனைச் சேர்ந்தவர். காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.