
செப்டம்பர் 9ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜகதீப் தன்கர் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் 21ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் 422 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.