Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

தங்கை திருமணத்திற்கு வந்த வியட்நாம் காதலியை கரம்பிடித்த நெல்லை வாலிபர்.

by Editor

தமிழர் உலகம்
தங்கை திருமணத்திற்கு வந்த வியட்நாம் காதலியை கரம்பிடித்த நெல்லை வாலிபர்.

நெல்லை டவுணை சேர்ந்தவர்  சுப்பிரமணியன், வாசுகி தம்பதியனர் இவர்களது மகன் மகேஷ். இவர்  வியட்நாமில் உள்ள ஐடி நிறுவனத்தில் குளோபல் மேனேஜராக  4 வருடங்களுக்குமுன்னர் பணிபுரிந்த நிலையில்  கடந்த இரண்டு வருடங்களாக ஹாங்காங்கில் பணிபுரிந்துவருகிறார். வியட்நாமில் பணி புரியும்போது உடன் பணிபுரியும் தோழி நுகின்லீதயுடன்  காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாக்க கூறப்படுகிறது.இந்த நிலையில் மகேஷின் சகோதரி பிரியாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு கலந்து கொள்ள வியட்நாமிலிருந்து மகேஷின் காதலி நுகின்லீதய்  வந்துள்ளார். வந்த இடத்தில் தமிழ் கலாச்சார முறை பிடித்துப் போனதால்  இருவீட்டார் சம்மதத்துடன் நெல்லையில் நேற்று  மகேஷ்.-நுகின்லீதய் திருமணம் தமிழ் கலாச்சார முறைப்படி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மணமகளின் தரப்பில் அவரது தாயார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Share via