Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

 தமிழ் மொழியை இந்தி மொழியாலோ இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாக திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.

by Admin

தமிழர் உலகம்
 தமிழ் மொழியை இந்தி மொழியாலோ இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாக திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.

 இந்தி என்பது ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாக ,சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரி படைந்ததால் உருவான மொழி.

 தமிழ், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தன்னிலிருந்து. திராவிட குடும்பத்து மொழிகளை கிளைத்திடச் செய்த தமிழ் மொழி.

 தமிழ் மொழியை இந்தி மொழியாலோ இந்தியை முன்னிறுத்தி மறைமுகமாக திணிக்க நினைக்கும் சமஸ்கிருதத்தாலோ ஒருபோதும் அழிக்க முடியாது.

 தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டை சிதைக்கும் நோக்கத்துடன் பன்னெடுங்காலமாக இனப் பகைவர்கள் நடத்திய படையெடுப்பை இந்த மண் தொடர்ந்து முறியடித்து வந்திருக்கிறது. இந்த நெடிய மரபின் தொடர்ச்சி தான் திராவிட இயக்கம்.

தமிழ் தனித்து இயங்கும் தன்மை கொண்ட செம்மொழி என்பதும் இந்தியாவின் பிற மொழிகள் போல வடமொழி ஆதிக்கத்தால் சிதைவுறாமல் என்றும் நிலைத்திருக்கும் மொழி என்பதும் இந்திய ஒன்றியத்தை ஆட்சி செய்பவர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறது.

ஆதிக்கத்தை உணர முடியாமல் போனவர்களின் தாய் மொழிகள் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கரைந்து காணாமல் போன துயர வரலாற்றை இந்தி பரவிய நிலப்பரப்பங்கும் காண முடியும்.

: பீகார் மாநில மக்களின் சொந்த மொழியான மைதிலி, அடுத்தடுத்து தலைமுறையினர் அறிய முடியாதபடி வழக்கொழிந்தது. இந்தியாவின் பெரிய மாநிலம் உத்தர பிரதேசம்.இந்தி தான் அந்த மாநிலத்தின் தாய் மொழி என பலரும் நினைப்போம். உண்மை அதுவல்ல..

 பிரஜ் பாஷா ,புந்தேல்கண்டி போஜ்புரி, அவ்தி, கண்ணோஜி, கர்வாலி மற்றும் குமோனி என மண்ணின் மைந்தர்களுடைய மொழிகள் அனைத்தையும் இந்தி என்கிற ஆதிக்க மொழியின் படையெடுப்பு சிதைத்து விட்டது..

இவை மட்டுமா ஹரியாண்வி ,ராஜஸ்தானி ,மார்வாரி, மேவாரி ,மால்வி ,நிமதி, பகேலி, சந்தாலி ,சத்தீஸ்க,ரிகோ ர்வா உள்ளிட்ட மொழிகள் பேசுவோரை தேட வேண்டி உள்ளது.

உ.பி, பீகார் ,மா. பி, ஜார்கண்ட் ,சத்தீஸ்கர், ஹரியானா ,ராஜஸ்தான் என இந்தியா ஆட்சி மொழியாக கொண்ட மாநிலங்களின் பூர்வீக மொழிகள் சிதைக்கப்பட்டு, பண்பாட்டு விழிமியங்களும் இலக்கியச் செழுமைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய் இருக்கின்றன.

.முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்

Share via