Advertiment

இளவட்டங்கள் இளவட்டக்கல்லை தூக்கி வீசும் அழகை பாருங்கள் 

by Editor

தமிழர் உலகம்
இளவட்டங்கள் இளவட்டக்கல்லை தூக்கி வீசும் அழகை பாருங்கள் 

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் பொங்கல் நேரத்தில் சிலம்பம், சடுகுடு, மாட்டுவண்டி போட்டி கயிறுஇழுத்தல்,உள்ளிட்ட விளையாட்டுகள் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த விளையாட்டுகளில் திருநெல்வேலி மற்றும் தென் மாவட்டத்தின் தென்பகுதி கிராமங்களில் இளவட்டக்கல் என்ற வீர விளையாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இளவட்டக் கல்லுக்கு நூறாண்டுகளுக்குமுன்னர் திருமண கல் என்ற பெயரும் உண்டு. முந்தைய காலங்களில் இளவட்டக்கல் என்ற 129 கிலோ எடையுடைய உருளை வடிவிலான இளவட்டகல்லை தூக்கி வீசுகின்ற இளைஞருக்குத்தான் பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் அன்றைய நம் முன்னோர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்தப் பழக்கம் நாளடைவில் மறைக்கப்பட்டாலும் இன்றும் சில கிராமங்களில் இளவட்டக்கல் இளைஞர்களின் மன வலிமையையும், உடல் பலத்தையும் சோதிக்கும் அளவீடாக பார்க்கப்படுகிறது. அதிலும் இளவட்டக்கல் என்றாலே திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளைதான் அதற்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

வடலிவிளை கிராமத்தில் ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் முக்கிய போட்டியாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி விறு விறுப்பாக நடத்தப்படுவது வழக்கம். இதில் இளைஞர்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல்லை தூக்குதல் மற்றும் உரல் மற்றும் இளவட்டகல்லை தூக்கி வீசும் போட்டிகளில் பங்கேற்று தங்களது வீரத்தையும் பலத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தெலங்கானாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 28 ஆம் ஆண்டு பொங்கல் விழா போட்டிகள் வடலிவிளையில் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி  ஆண்களுக்கும்,பெண்களுக்கும் நடைபெற்றது.

வடலிவிளை கிராமத்தில் நடைபெரும் பொங்கல் விழாவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி தமிழர்களின் பாரம்பரிய வீரத்துக்கு வாழும் சான்றாக இன்றளவும் திகழ்கின்றனர்

Share via