Advertiment

ஒலிம்பிக் போட்டி 2024 -சீனா இரண்டு தங்கப் பதக்கத்தைவென்றுள்ளது

by Admin

விளையாட்டு
ஒலிம்பிக் போட்டி 2024 -சீனா இரண்டு தங்கப் பதக்கத்தைவென்றுள்ளது

ஒலிம்பிக் போட்டி- 2024

 பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிசில் 2024 -ஒலிம்பிக் போட்டி வெகு சிறப்பான முறையில் விமர்சையாக சென் நதியில் படகுகள் அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான வீரர்களுடன் தொடங்கியது. இந்நிகழ்வு, பொது அரங்கத்தில் நடைபெறாமல் நகரத்தின் முக்கிய பகுதியில் 4 மணி நேரமாக நடைபெற்றது. டிடி ரைனர் ,மேரி ஜோஸ் பெரிய பலூன்களை பறக்கவிட்டு நிகழ்வை வெளிச்சப்படுத்தினர். இவ் ஒலிம்பிக் விழாவில் 250 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்கள் 32 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இப் போட்டி ஆகஸ்ட் 11 அன்று நிறைவு பெறுகிறது. இவ் ஒலிம்பிக் விழாவில் 250 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர்கள் சென் நதியில் 85 படகுகளில் அணிவகுக்க லேடி காகா, சிலின் டியான் இசைநிகழ்வுகளும் நடந்தது.

இதுவரை நடந்த போட்டிகளில் சீனா இரண்டு தங்கப் பதக்கத்தையும் தெற்கு கொரியா ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் அமெரிக்கா ஒரு வெள்ளி பதக்கத்தையும் கிரேட் பிரிட்டன் ஒரு வெண்கல பதக்கத்தையும் கஸ் திகிஸ்தான் ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளது. 

Share via