Advertiment
   அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மொழிப்போர் தியாகி நேசமணி நினைவு தினம் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை.

by Editor

தமிழர் உலகம்
மொழிப்போர் தியாகி நேசமணி  நினைவு தினம் உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணி அவர்களின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு அரசின் சார்பில்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  -

திருவாங்கூர் சமஸ்தானத்தால் அடிமைப்பட்டு இருந்த  கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது,  இதற்காக நடைபெற்ற போராட்டங்களில் மொழிப்போர் தியாகிகளை வழிநடத்தியதோடு சரியான திட்டங்கள் மூலம் குமரி விடுதலை போராட்டத்தில் முக்கிய தலைவராக விளங்கியவர் மார்ஷல் நேசமணி 1968 ஆம் ஆண்டு மறைந்தார். அவரை கவுரவிக்கும் விதமாக மாண்புமிகு மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமையிலான தமிழக அரசு  கடந்த 2004 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மணி மண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்த்தது, இந்நிலையில் மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 56 -வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு  வருகிறது. அதன் படி  தமிழக அரசு சார்பில்  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Share via

More Stories