Advertiment

மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது.

by Admin

விளையாட்டு
 மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது.

இனாம் மணியாச்சியில் உள்ள அம்மா திடலில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இப்போட்டியானது தென் மண்டல அளவிலான மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தென்காசி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், ஆகிய மாவட்டத்திலிருந்து 60 அணியில் பங்கேற்றனர். மாபெரும் மின்னொளி கபடி போட்டி எம்ஜிஆர் இளைஞர் அணி மேற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகை பாலன் தலைமையில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு மின்னொளி கபடி போட்டி போட்டியை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து கபடி போட்டியில் வெற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு முதல் பரிசினை ரூபாய் 20,000 வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி பிஜேபி 124 வார்டு சக்தி கேந்திரா உறுப்பினர் விக்னேஷ்குமார் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார். முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். .நிகழ்ச்சியில்  ,அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share via