Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா

by Admin

தமிழர் உலகம்
இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா

இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா கோலகலமாக தமிழர்களின் உடைய இல்லங்களில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாவிலை தோரணம் கட்டி வாசலிலே வண்ணக் கோலம் இட்டு இருபுறமும் கரும்புகளில் அணிவகுப்போடு அறுவடை திருநாளாம் இப் பொங்கல் திருநாளில் தமிழ் மண்ணில் விளைந்த பச்சரிசி கரும்புச்சாறு வழிவந்த வெள்ளம் ,முந்திரி, உலர்த்திராட்ச்சை என்று சர்க்கரை பொங்கல் விடுவதற்கான உணவுப் பொருட்களை தந்து... இஞ்சி, மஞ்சள், பூசணிக்காய் ,சிறு கிழங்கு, புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ,பச்சை மிளகாய்... தமிழ் மண்ணில் விளைந்த காய்கறிகளை அறுவடை செய்து பூமிக்கும் சூரிய ஒளிபாய்ச்சி உயிர்களை மலர்த்தும் சூரியனுக்கும் அதனோடு தொடர்புடைய அனைத்துக்கும் நன்றி செலுத்தும் திருநாள் பொங்கல்.. இது தமிழர்களின் பாரம்பரிய விழா... அறுவடை திருவிழா என்று மட்டும் சொல்லாமல் இதுதான் தமிழர்களுடைய மாதத்தில் முதல் மாதமாகவும் கொள்ளப்படுகின்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. இந்த தை மாதத்தை தொடர்ந்து விளைவித்து கொடுத்த நிலங்களும் அதற்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கும் ஓய்வழித்து மூன்று நான்கு மாதம் கழித்து அடுத்த அறுவடைக்கான சூழல்களை தமிழர்கள் செய்த இதற்கு இடைப்பட்ட காலங்களில் கோவில் திருவிழாக்கள் தமிழர்களுடைய பண்டிகைகளும் தொடர்ச்சியாக வந்து தமிழர்களின் உடைய மனங்களை எல்லாம் மகிழ்விக்க கூடியதாக அமையும் .அறுவடைக்கு பின் கையில் நெல் விற்று பிற தானியங்களை விற்று வைத்திருக்கின்ற காசு புழக்கத்தினால் தமிழர்கள் இல்லங்களில் எல்லாம் மகிழ்ச்சி நிறைந்து ஓடும். மாட்டுக்கும் மனிதனுக்கும் ஆன உற்பத்தி உறவு தொடர்ச்சியாக வலுப்பட்டு கொண்டிருப்பதை போற்றும் விதமாக மாட்டுப்பொங்கலும் அது சார்ந்திருக்கின்ற காணும் பொங்கலும் தொடர்ச்சியாக தமிழர்களிடமிருந்து கொண்டாடப்படுகின்ற சிறப்பான விழாக்கள் ஆகும்.. இந்த விழா காலகட்டத்தில் தான் மாடுகளோடு மண்டியிட்டு தங்களுடைய வீரத்தை நிலை நாட்ட கூடிய ஜல்லிக்கட்டுகளும் தமிழகமெங்கும் நடைபெறும்.. அறுவடை திருநாள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டாலும் தமிழர்கள் கொண்டாடும் இந்த தை பொங்கல் மற்ற பண்டிகைகளை விட மிக மிக சிறப்பு வாய்ந்ததாகும்..

 

Share via

More Stories