Advertiment

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர்  அணி காலிறுதிக்கு தகுதி

by Editor

விளையாட்டு
ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஆடவர்  அணி காலிறுதிக்கு தகுதி

 

 
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி அர்ஜெண்டினாவை அற்புதமாக வென்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றது.
ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஹாக்கியில் லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவை வீழ்த்தியது இந்திய அணி. இந்தியாவின் சார்பில் ஹர்மன்ப்ரீத் சிங், விவேக் சாகர், வருண் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடி கோல் அடித்தனர். 
இந்த வெற்றியின் காரணமாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதிப்பெற்றது. கடந்த ரியோ ஒலிம்பிக்கில் அர்ஜெண்டினாவிடம் தோற்று வெளியேறிய இந்திய அணி, இம்முறை டோக்கியோவில் பழிதீர்த்துள்ளது. கடந்த ஒலிம்பிக்கிலே அர்ஜெண்டினா அணி தங்கம் வென்றது 

Share via

More Stories