Advertiment

5 பதக்கங்களை வென்ற இந்தியா

by Staff

விளையாட்டு
5 பதக்கங்களை வென்ற இந்தியா

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகளை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். நேற்று நடந்த தொடக்க விழாவில் அனைத்து அணிகளும் சிறப்பு அணி வகுப்பு நடத்தினர். 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை 3 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது. மகளிர் 10மீ துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆஷி சவுக்‌ஷி, மெகுலி கோஷ் ரமிதா ஆகிய வீராங்கனைகள் அடங்கிய குழு வெள்ளி பதக்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கப் பட்டியல் கணக்கை தொடங்கி வைத்தது.

Share via

More Stories