Advertiment

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன்

by Admin

விளையாட்டு
 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து  போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன்

சிட்னியில் நடைபெற்ற மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியில், ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 1.-0 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது ,ஸ்பெயின் .மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெறுவது இதுவே முதல் தடவை. ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீராங்கனை ஓல்கா கார்மோனா அடித்த கோலே அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது..இந்த வெற்றியை ஸ்பெயின் மக்கள் மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் கொண்டாடி வருகின்றனர்.

 

Share via