இன்று இந்தியாவும் மேற்கிந்திய தீவுகளும் கான்சிங்ஸ்டன் ஓவல் பார்படாஸ் தீவில் உள்ள பிரிட்ஜ் டவுன் கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது கிரிக்கெட் ஒருநாள் போட்டி நடந்தது.டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, மேற்கிந்திய தீவு அணி களத்தில் இறங்கி ஆ ட ஆரம்பித்தது. மேற்கிந்திய தீவு அணி 23 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஆடுகளத்தை விட்டு வெளியேறியது .அடுத்து களம் புகுந்த இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து மூன்று ஒரு நாள் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அடுத்த போட்டி ஆகஸ்ட் மாசம் ஒன்றாம் தேதி பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி நடத்தும் தரு பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. .