
தென்காசி மாவட்டத்தில் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியும்,
சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடிக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் மன்னர் பூலி தேவரின் முதன்மை படைத்தளபதி வெண்ணி காலாடியாருக்கு திருவுருவச் சிலை அமைக்க இடம் தேர்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார்.