Advertiment

இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகள்

by Editor

தமிழர் உலகம்
இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகள்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில்  முளைக்கட்டு உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் சின்ன மாடு, பெரியமாடு என  இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டிக்கு பந்தயத்தில் சென்று வர 10கிலோமீட்டர் தூரம்  சின்னமாட்டு வண்டிகளுக்கு 8கிலோமீட்டர் தூரமும் எல்கயாக நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது.  இந்த பந்தயத்தில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 31 மாட்டுவண்டி பந்தயம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.முதல் மூன்று இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப்பணம் நினைவுப் வழங்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர் இந்த போட்டிகள் கிராமங்களில் நடைபெறுவதால் மக்கள் உற்சாகத்தோடு தமிழர்களின் வீர விளையாட்டுக்களை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Share via