
கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு தமிழுக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பெருமைசேர்த்தபெருமைக்குரியவர்களை சிறப்பு செய்யும் முகமாக தமிழர் தகைசால் விருது வழங்கி கெளரவப்படுத்துகிறது.
அந்தவகையில் ,இந்தாண்டு ப்பொதுவுடமைச்சித்தாந்தவாதியும் மூத்த தலைவருமானஆர்.நல்ல கண்ணுவிற்கு இந்த ஆண்டு தமிழர் தகைசால் விருதினை வழங்கி கெளரவிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இளம் வயதிலே,இந்தியசுதந்திரபோராட்டத்திலும் மக்கள் நலப்பணியிலும் தன்னை இணைத்துக் கொண்ட நல்ல கண்ணு ஓர் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக. .மாற்று இயக்கத்தினராலும் மதிக்கப் பெற்றவர். அவருக்கு தமிழர் தகைசால் வழங்குவதின் மூலம்10 லட்ச காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.