
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். தரமான கருங்கால் பொன்றம், காகம், நூலான், வெள்ளைக்கால் வெள்ளை, கீறி, மயில், வல்லூறு ரகங்கள் வீரியத்துடன் சண்டை போடக்கூடிய சுமார் 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை கொண்ட சேவல்களை சண்டையிட்டு பார்த்து தேர்வு செய்து ரூபாய் 3ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விலைக்கொடுத்து வாங்கி சென்றனர். நல்ல வீரியத்துடன் சண்டையிடும் சேவல்கள் பண்டிகை களங்களில் நடைபெறும் சேவல் சண்டையில் சுமார் ரூ 1 லட்சம் வரை பந்தயம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால் வாரசந்தையில் சண்டை பிரியர்கள் சண்டையிட்டு பார்த்து சேவல்களை தேர்வு செய்து ஆர்வத்துடன் வாங்கி செல்வது வழக்கமாக இருந்து வ்ருகிறது.