
தி.மு.க வை உடைத்து வெளியேறிய எம்.ஜ்.ஆர் அ.தி.மு.க எனும் இயக்கத்தை தோற்றுவிக்கும் பொழுதே., .ஈ.வி.கே. சம்பத் போன்றவர்களும் புதிய இயக்கம் கண்டனர். ஆனால் ,தி.மு.கவின், கட்டமைப்பில் சிறு சலசலப்பு தோன்றியதே தவிர தி.மு.க.. முற்றிலும் உடைந்து சின்னாபின்னமாகவில்லை. காரணம், கலைஞர் எனும் ஆளுமை. எம்.ஜியாருக்கு இணையான செல்வாக்கு இல்லாவிட்டாலும் அதற்கு சற்றும் குறைவில்லா செல்வாக்குடையவராக இருந்த .கலைஞர் எனும் தனித்திறன் பெற்றவா் .பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும் நிர்வாகத்திறத்தாலும் வல்லமை வாய்ந்த கலைஞர். எம்.ஜி.ஆர் எனும் சூறாவளியால் வளைத்து சுருட்டித் தி.மு.க வை அழித்தொழிக்க முடியவில்லை.ஆனால்,எம்.ஜி.ஆர் இருக்கிற வரை கலைஞரால் ஆட்சிப்பீடத்தில் அமர முடீயவில்லை.இருப்பினும், தி.மு.க வை ஒரு ராணுவ கட்டுப்பாடோடு கலைஞர் நிர்வகித்து வந்தார் . ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியினர் பாதுகாக்கப்பட்டனர். அதற்குப்பிறகு அ.தி.மு.க. ,திமு.க.விலிருந்து பலர் தனிக் கட்சித் தோற்றூவித்து ...அடையாளம் தெரியாமல் போனவர்களும்.உண்டு..பின் இந்த இரு அமைப்புகளிடம் சரணாகதி அடைந்து ..பதவிகளைப் பெற்று ..ஒரு கட்சியாக மட்டுமே செயல் பட்டுக்கொண்டிருப்பவர்குளும் உண்டு .அதற்குக் காரணம் .எம்ஜி.ஆர் -கலைஞர் என்கிற ஆளுமையின் கீழ் இரு கட்சிகள் இயங்கியதே. .... தனித்த மக்கள் செல்வாக்கு பெற்ற .எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் அ.தி.மு.க உடைந்து ..ஆர்.எம்.வி..திருநாவுக்கரசர் ,ஜானகி -ஜெயலலிதா என உடைந்தாலும்-ஜெயலலிதா எனும் ஆளுமையின் கீழ் அக்கட்சி சென்று ஆட்சியை பல முறை பெற்றது .அப்பொழுதும் தி.மு.க வை பலகீனப்படுத்தும் முயற்சி தொடர்ந்தன .ஆனால் ,தி.மு.கவை சிதைக்க்கும் முயற்சி நடந்தாலும் கலைஞர் ஆளுமையினால் ,தி.மு.க கட்டமைப்பு வலுவிழக்கவில்லை ..- -ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க உடைபடும் சூழலைத் தவிர்த்து கட்சியை உடையாதிருக்க சசிகலா , எடப்பாடி தலைமையில் ஆட்சி ஒப்படைத்து,அவர் சிறை சென்றார். அம்மா முன்னேற்றக்கழகம் தோன்றியதால் அ.தி.மு.க.விற்குள் அது எந்த சேதத்தையும் ஏற்படுத்த வில்லை .ஈ.பி.எஸ்.,ஒ.பி.எஸ் உடனிணைந்து ஆட்சித் தொடர மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி யடைந்தன.ஆட்சி தக்க வைக்கப்பட்டது. ஜெ. மறைவிற்குப் பின் அ .தி.மு.க ஆட்சி நான்காண்டுசத்தமில்லாது உருண்டோடியது.எதிா்கடசியான தி.மு.க ஆட்சியைக் கலைக்க எந்த முயற்சியை மேற்கொள்ளாது மக்கள் பணியில் தீவிரம் காட்டி உழைத்தது. அதன் விளைவு...தி.மு.க அரியாணை ஏறி மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். அ.தி.மு.க இரட்டைத் தலைமையில் இயங்கி வந்தது..மேற்கு மண்டலத்தில் இ.பி.எஸ்.மறைமுகமாக தனக்கான கோட்டையாக வளர்தெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வந்தார் .ஒ.பி.எஸ்.தென்மண்டலம் தன்னை தான் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்;.இருந்து வந்தார்..ஆனாலும், இருவருக்குள்ளும் பனிப்போர் நடந்து கொண்டேயிருந்தது.இது ராஜ்ய சபா தேர்தலில் 50 க்கு 50 என்கிற விகிதாசாரத்தை தம் ஆதரவாளா்களுக்கு பெற்றுக் கொடுத்ததிலிருந்து வெளிச்சமாகியது.. இருப்பினும்,இருவருக்குள்ளும் யார் பெரியவர் என்கிற போக்கு ..சலசலப்பு உருவாகியது. ஒற்றைத் தலைமையில் அ.தி.மு.க செயல்பட வேண்டும் எனும் கருத்து பெரும் சர்ச்சையாக , இரு தரப்பிலிருந்தும் வெடித்துக்கிளம்பியது. இரு தரப்பும் இரண்டு முறை அம்மாவால் முதலமைச்சராக்கப்பட்டவர் ஒ.பி.எஸ். அதனால் ,அவரே ஒற்றைத்தலைமை ஏற்க தகுதியானவர் என்கிற வாதமும்;..இல்லை ,,நான்காண்டுச் சிறப்பாக ஆட்சி புரிந்த ஈ.பி.எஸ் க்கு தான் என்கிற வாதங்கள் தொடா்ந்தன. .அ.தி.மு.க மீண்டும் ஒரு முறை பிளவுபட்டால்.,..அதனை மீண்டும் ஓர் வலிமையான இயக்கமாக முன்னிருத்த முடியுமா என்பது கேள்விக்குறியே...ஏனெனில் . ஈ.பி.எஸ்..ஒ.பி.எஸ் இருவரும் கட்சி பதவிகளை வைத்து கட்சிக்குள் தங்களை தலைவர்களாக முன்னிருத்திக் கொண்டவர்களே தவிர..,மக்கள் செல்வாக்குப் பெற்ற எம.ஜி.ஆர்.-,கலைஞர்--ஜெய.லலிதா போன்ற ஆளுமைகளின்.தனித்த திறமைகளை கொண்டவர் அல்லர் .இருவருக்கும் இரு அதிக எண்ணிக்கை கொண்ட சாதிய பின்புலம் மட்டுமே உள்ளது.. இப்பொழுது அது மட்டும்தான் முன்னிருத்தப்படலாம். இதில் யார் ஒருவா் வென்றாலும் அ.தி.மு.க உடைவதை தவிா்க்க இயலாது..
Sent from my iPad