
சென்னை சேவாலயா செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் சார்பில் பாரதி செல்லம்மாள் உருவச்சிலை அமைக்கப்பட்டு, ரதம் மூலம் தமிழகம், புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த ரதமானது தென்காசி,செங்கோட்டை வீரவாஞ்சிநாதன் சிலை அமைந்துள்ள பகுதி என மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வலம் வந்த ரதத்திற்கு ஆங்காங்கே உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.முன்னதாக தோரணமலை முருகன் கோயில் வளாகத்திற்கு வருகை தந்தது.
தொடர்ந்து உற்சவருக்கும், பாரதி-செல்லம்மாள் சிலைக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம்17ஆம் தேதி புறப்பட்ட இந்த ரதமானது தமிழகம், புதுச்சேரி முழுவதும் பல்வேறு ஊர்கள் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இச்சிலை பாரதி-செல்லம்மாளின் 125ஆவது திருமண நாளையொட்டி திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சேவாலயா அமைப்பினர் தெரிவித்தனர்.