Advertiment

ஆஸ்திரேலிய பகலிரவு டெஸ்ட் போட்டி :  இந்திய மகளிர் அணி  வீராங்கனைகள் அறிவிப்பு

by Editor

விளையாட்டு
ஆஸ்திரேலிய பகலிரவு டெஸ்ட் போட்டி :  இந்திய மகளிர் அணி  வீராங்கனைகள் அறிவிப்பு


 

ஆஸ்திரேலிய பகலிரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய மகளிரணி வீராங்கனைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருந்தது. கொரோனா அச்சுறுத்தல்காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது.


இந்தநிலையில் வருகிற செப்டம்பர் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ளது. 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதற்கான அறிவிப்பை கிரிக்கெட் ஆஸ்திரேரியா வெளியிட்டுள்ளது.
இந்திய – ஆஸ்திரேலிய மகளிர் அணிகள், பெர்த் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை விளையாட உள்ளன. இந்திய அணி விளையாட உள்ள முதல் பகலிரவு டெஸ்ட் இதுவாகும்.


இந்திய, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள், ஒரு நாள் தொடர் செப்டம்பர் மாதம் 19ம் தேதி, 22ம் தேதி, 24ம் தேதிகளில் நடக்கிறது. டெஸ்ட் தொடர் செப்டம்பர் 30ம் தேதி, அக்டோபர் 3ம் தேதி நடக்கிறது. டி.20 தொடர் அக்டோபர் 7ம் தேதிர, 9ம் தேதி, 11ம் தேதிகளில் நடக்கிறது

Share via

More Stories