Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

கணினி மொழி -கோடிங் உருவாக்கப்பட வேண்டும். தமிழை பேச்சளவில் வளர்ப்பதாகச் சொல்லாமல் செயலாக்க மொழியாக மாற்ற வேண்டும

by Admin

தமிழர் உலகம்
 கணினி மொழி -கோடிங் உருவாக்கப்பட வேண்டும். தமிழை பேச்சளவில் வளர்ப்பதாகச் சொல்லாமல் செயலாக்க மொழியாக மாற்ற வேண்டும

தமிழ் ஏன் தொன்மையான மொழியாகயிருந்தும் உலகளாவிய மொழியாக வடிவெடுக்கவில்லை என்பதை ஒவ்வொரு மொழிப் பற்றாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். புலம் பெயர் தமிழர்களால் இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா போன்ற சிறிய நாடுகளில் ஆட்சி மொழியாக அரங்கேறி இருக்கிறது.இது தவிர்த்து பல நாட்டு பல்கலைக்கழகங்களில்இருக்கைகள் அமைக்கப்பட்டு ,விரும்பிய வெளிநாடு வாழ் மக்கள் படிக்க ஒரு படிப்பாக உள்ளது.ஏன் தமிழைப்படிக்க வைக்க ஓர் உலக  .வலிமையான பொருளாதாரம் நிரந்த வைப்பு தொகை தமிழ் சார் அரசாங்கதின் வாயிலாக உருவாக்க வேண்டும்.இலக்கிய மொழி தானே என்று நினைக்காமல் வாழ்க்கையின் இலக்கு மொழியாக மாற்ற வேண்டும்.புதிது புதிதான மென் பொருட்கள் உருவாக்கதேவையான கணினி மொழி -கோடிங் உருவாக்கப்பட வேண்டும்.பொறியியல் பாடங்கள்,வேதியியல்,இயற்பியல்,கணித பாடங்கள் பள்ளிகளோடு நின்று விடுவதை மாற்றி  தமிழை பேச்சளவில் வளர்ப்பதாகச் சொல்லாமல் செயலாக்க மொழியாக மாற்ற வேண்டும. மென் பொருளில் தமிழர்கள்தான் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களை,அவர்களுடைய நிறுவனத்தை அழைத்து தமிழை புதிய நிலைக்கு எடுத்துச்செல்ல ஆலோசனை பெறலாம்.அத்துடன் ஒவ்வொரு நிறுவனமும் புதிய கணினி மொழி வளர்ச்சிக்கு துணை நின்றால்,தமிழ் நாட்டிலுள்ள அந் நிறுவனங்களுக்கு அப்புதிய மொழி வடிவமைக்கும் காலம் வரை முழுமையான வரி விலக்கை அளிக்கலாம்.அது சாத்தியமில்லை யொனில் பாதியாக கூட வரி பெறலாம் அரசு மட்டுமே இதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு.ஒட்டுமொத்த ஏழரை-எட்டுக்கோடி மக்களையும் அரசு பேண வேண்டும்.அதனால், மொழி வளர்ச்சி,பாதுகாப்பு என்று மட்டும் பேசாமல் பல்துறையில் விற்பன்னர்கள்,தொழிலதிபர்களிடம் அரசு ஒத்துழைப்பு கேட்டு தமிழை நவீன கணினி மொழியாக மாற்றினால் ,அது உலக மொழிகளில் தொன்மையான நவீன மொழி என்று கற்க வருவர்.வேலை வாய்ப்பு கிடைக்கும் .தமிழ் தொன்மையான மொழி என்றாலும் காலந்தோறும் அது பல இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளால் செழித்துக்கொணிடுதான் வருகிறது.இருப்பினும் இலக்கிய மொழியாக அதன் எல்லை சுருங்கிவிடக்கூடாது.தமிழ் போல் தொன்மையான சித்திர எழத்துக்கள் கொண்ட சீன மொழியில் கணினி மொழி கோடிங் உள்ளதே.தமிழால் வாழ்ந்தோர் தமிழை வாழ வைக்க முயல வேண்டும்.
 

Share via

More Stories