Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தமிழகத்திலிருந்து டெல்லியில் சென்று ஒப்படைத்த பசியில்லா தமிழகம்

by Editor

தமிழர் உலகம்
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தமிழகத்திலிருந்து டெல்லியில் சென்று ஒப்படைத்த பசியில்லா தமிழகம்

தென்காசியில் பசியில்லா தமிழகம் என்ற தொண்டு நிறுவனம்  செயல்பட்டு வருகிறது.இந்த அமைப்பின் மூலம்  தமிழகம் முழுவதும் சாலையோரம் ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டெடுத்து உரிய சிகிச்சை வழங்கி ஆசிரமத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார்.

அந்த நபருக்கு கவுன்சிலிங் கொடுத்து அவரது இல்லம் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த அமைப்பு ஈடுபட்டு அதற்கான விசாரணையில் இறங்கியதில் அவரது பெயர் பீரேந்நிர டிக்கா என்றும், ஊர் ஜார்க்கண்ட் என்றும் தற்போது அவர்கள் குடும்பம் டெல்லியில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். 

காவல்துறை உதவியுடன் அந்த பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தை கண்டுபிடித்து அவரை பற்றிய முழு தகவல்களும் பெறப்பட்டது. பின்பு அவர்களை தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்று அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ள்ளனர்.

டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்த அவரது மகள் காணாமல் போன தந்தையைப் பார்த்ததும் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீருடன்‌ அவர்களை சேர்த்துவைத்த தொண்டு நிறுவனத்திற்கும்,தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி கூறினார்.

ஹிந்தி தெரியாத நிலையில் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்த பசியில்லா தமிழகம் குழுவினரை, தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரைச் சார்ந்த இந்திய ராணுவ வீரர் பரமசிவன் என்பவர்  வரவேற்று உணவு, தங்கும் வசதி அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். 

இனம், மொழி, மதம் கடந்து மனிதநேயத்தை மட்டுமே பறை சாற்றும் நிகழ்வாக அமைந்தது இந்த கருணைப்பயணம்.தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் அனாதைகளாக வரலாம், ஆனால் தமிழகத்திற்கு வந்த பிறகு யாருமே அனாதைகள் கிடையாது, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.

Share via

More Stories