Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

உறவுகள் ...ஏன் ..விலகி செல்கின்றனர்.

by Admin

தமிழர் உலகம்
உறவுகள் ...ஏன் ..விலகி செல்கின்றனர்.

 



உறவுகள் என்னும் பிணைப்பு ,மனித சமூகத்தினர் தவிர வேறு எந்த ஜீவ ராசிகளுக்கும் ஏற்படுத்தப்படவில்லை.
தாய்-குட்டி என்கிறதை தவிர இணை என்கிற பிணைப்பு கூட ஒரு சில உயிரினங்கள் தவிர..மற்றவைகளுக்குள்
வலுவாக இல்லை.
புறா தன் இணை புறா இறந்து விட்டால் கூழாங்கற்களை உண்டு இறந்து விடுமென்றும்  குரங்கு தன் இணையான
கடுவன்(ஆண்குரங்கு)இறந்துபடுமின் தன் குட்டிகளை தனக்கு நெருக்கமான குரங்கு கூட்டத்தில் சேர்த்து விட்டு
மலை உச்சியிலிருந்து குதித்து மாண்டுவிடும் என்று பண்டைய தமிழ்ச்சமூக இலக்கியங்கள் கூறுகின்றன.
ஆனால், மனித உறவுகள் 1)ரத்த உறவு முறை 2)திருமணத்தால் ஏற்படும் உறவு  என இரண்டு முறையில் பிணைக்கப்
பட்டு பேணப்படுகின்றன.ரத்த உறவு என்பது உடன் பிறந்தார்,பெற்றோர் தாய்,தந்தை வழி உறவுகளைக்குறிக்கும்.
திருமண உறவு என்பது பெண்-ஆண் கொள்வினை,கொடுப்பிணை வழியாக வருவது.
இது தான் உறவு சங்கிலியின் கண்ணிகள்.இவற்றை பேணிகாப்பது என்பது பெரும் சவால்கள் நிரம்பியது.
ரத்த உறவுக்குள் சண்டை ,பிணக்கு ஏற்படுவது என்பது சொத்து அல்லது மரியாதைபடுத்தவில்லை என்பதில்தான்
உருவாகும்.திருமண உறவுக்குள் ,திருமணம் முடிந்துவிட்டதே இனி என்ன ?என்கிற அலட்சிய போக்குமேலோங்கி
உறவுகளை உதாசீனப்படுத்தும். யார் ஒத்துப்போகிறார்களோ அவர்களோடு மட்டுமே பந்தத்தை வலுப்படுத்தி
மற்றவர்களை ஓரங்கட்டுகின்ற போக்கு தொடர்கிறது.இதனாலும் உறவுச்சங்கிலியில் கண்ணியின் பிணைப்பு
நெகிழ்ந்து போகும் தன்மை உருவாகும்.மற்றவர்களை மதிப்பது,விட்டுக்கொடுத்து செல்லுதல்தான் உறவுகளை
இறுக்கமாக வைத்திருக்கும்.

Share via

More Stories