Advertiment

தமிழ்த்தாய் பாடல் -ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

by Admin

தமிழர் உலகம்
 தமிழ்த்தாய் பாடல் -ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

 



நேற்று ,73 வதுகுடியரசு தினம் சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் நடந்தது.அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதிகாரிகள் எழுந்து நிற்காமல் இருந்தனர்.இத்தகு அவமதிப்பைகண்டு
கொதித்து போன தமிழ் உணர்வாளர்கள் அதிகாரிகளிடம் தமிழ்த்தாய் பாடல் இசைக்கும் பொழுது   எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது தெரியாத என்று   கேள்ளி எழுப்பினர்.அதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை   என்று உயர் நீதி மன்றம் சொல்லியிருக்கிறது என்று பதிலளித்தனர்.அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று எதிர்கேள்வி எழுப்ப..அதிகாரிகள் பதில் சொல்லமல் சென்று விட்டனர் .இந்நிகழ்வு ஊடகங்களில்
வெளிவர   அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன.தி.மு.க மாநில மகளிரணி-
தலைவர் கனிமொழி எம்.பி,. அதிகாரிகள் ,மாநில அரசை விட பெரியவர்களா என்று ஆவேசமாக தம் ட்விட்டர்
பதிவில் பதிவிட்டார்.இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன்,மக்கள்வாழ்
வுரிமை கட்சியின் தலைவர் வேல் முருகன் போன்றோர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.இந்நிலையில்,சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை காவல்துறையில் ஆன்லைன் மூலமாக  புகார் கொடுத்துள்ளார்.காவல்துறை விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்.

 

Share via