Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

மொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள்

by Admin

தமிழர் உலகம்
மொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள்

மொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள்

மொழி ஒரு சமூகத்தின் பண்பாட்டுத்தொடர்புக்கருவி .மனித சமூகசாரத்தின் மேலோங்கிய நிலையை எடுத்துரைக்கும் சிறப்புக்கூறு. பல்வேறு மொழிகளைப்பேசும் தேசீய இனங்கள் வாழும் ஒரு தேசத்தில் அரசியல்  காரணம் கருதி ஒரு குறிப்பிட்ட மொழி திணிக்கப்படுதல் தவறானது.அவ்வாறு ஒருமொழி திணிக்கப்படும்பொழுது அந்த நாட்டில் திணிக்கப்பட்டோருக்கும் திணித்தோருக்கும் இடையே  ஒரு முரண்பாடு தோன்றும்.இவ்வாறுதான் சென்னை மாகாணத்தில் இந்தி மொழி திணிப்பு ஏற்பட்டது. இந்தி மொழியினை ஆதரித்து இந்திப்பிரசார சபாவில் 12.7.1937 அன்று ராஜாஜி பேசினார்.இந்தியாவில் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கும் தேச ஒற்றுமையை நிலை நாட்டுவதற்கு ஒரு பொது
மொழி தேவை என்று வலியுறுத்தி பேசினார்.இப்பேச்சு தமிழறிஞர்களிடமருந்து எதிர்ப்பு வேகமாகக்கிளம்ப ஆரம்பித்தது.27.8.1937  கரந்தை தமிழ் ச்சங்கத்தில் நடந்த  கூட்டத்தில்  கட்டாய இந்தி மொழியினால் ௨  ருவாக போகும் தீமையை எடுத்து விளக்கி ஒருங்கிணைந்த எதிர்ப்புணர்வை ஊட்ட வழிகோலினர்.இவ் எதிர்ப்பு அணியில் தமிழறிஞர்கள் த.வே.உமகேஸ்வரனார்,வெங்கடாசலனார்,ஜே.எம் சோமசுந்தரம். ஆர்.வெங்கடாசலனார் ஆகியோர் சிறப்பிடம் பெற்றிருந்தனர்.இந்தி மொழியினால் தமிழ் மொழிக்கு
ஏற்படப்போகும் தீமைகளைப்பற்றிய இவர்களது உரை அறிஞர்கள் மட்டத்தில் இந்திக்கு ஓர் எதிரிப்புனர்வைத் தோற்றுவிக்க காரணமாக இமொழிப்போர் குறித்து தமிழறிஞர்கள்இம்மொழி அறிஞர்களின் எதிர்ப்புணர்வுக்கு ஆதரவாகக்கரந்தைத்தமிழ்ச்சங்கமும்,திருவையாறு அரசர் கல்லூரி மாணவர்களும் துணை நின்றனர்.25.10.1937இல் முதல்வர் ராஜாஜிக்குத்தமிழறிஞர்   க.சோமசுந்தர பாரதியார் இந்தி மொழியைக்கட்டாயப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டாம்என்று
ஒரு மடல் அனுப்பினார்.இம்மடலில் இந்தி மொழியைக்கட்டாயப்பாடமாக அறிமுகப்படுத்தினால் அது சென்னை மாகாண மக்களை மிகவும் பாதிப்படையச்செய்வக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும்நீங்கள் சென்னை காணத்திற்கு முதலமைச்சராகயிருக்கலால்.ஆனால் தமிழ் மொழிக்கு நான்தான் தலைவன். நீங்கள் சொல்லும் காரணத்தை ஒத்துக்கொண்டு இந்தியை ஏற்றுக்கொளளமாட்டோம்.இந்தியைத்திணிக்கஉங்களுக்கு உரிமையில்லைஎன்றும் எழுதியிருந்தார்.
 

 

Share via

More Stories