Advertiment

வீரர்களின் உண்மையானவரலாற்றை கண்டறிந்து....

by Admin

தமிழர் உலகம்
வீரர்களின் உண்மையானவரலாற்றை கண்டறிந்து....

இந்திய குடியரசு75 ஆண்டு கொண்டாட்ட ஒத்திகை நிகழ்வு தொடர்ந்துநடந்து கொண்டிருக்கின்றன.37மாநில- யூனியன்    பிரதேசங்களை உள்ளடக்கிய இந்தியாவில் ,பத்து மாநில அலங்கார ஊர்திகள் மட்டுமே குடியரசு தின விழாவில்
பங்கெடுக்க உள்ளதாகத்தகவல்.கொரோனா பரவல் காரணமாக,இந்தாண்டு பல மாநில பங்களிப்பின்றி குடியரசு அணிவகுப்பு நடைபெறுமென்று சொல்லப்பட்ட நிலையில்,தமிழக முதலமைச்சர் இது குறித்து கடிதம் எழுதினார். இதற்கு ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  விளக்கமளித்தார்.இது ஊடகங்களில் கடும் விவாத பொருளானது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு  அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ள தமிழகசுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பு வளரும் தலைமுறைக்கு தெரியாமல் போய் விடக்கூடும் என்பதை கருத்தில் கொணடு,டெல்லி அணிவகுப்பில் பங்கேற்காத அனைத்து ஊர்திகளும் தமிழகமுழுவதும்  பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்லப்படும் என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பு தேசிய பற்றுடையோரை மகிழ்வித்தது.வீரபாண்டிய கட்டபொம்மன்,மருது சகோதரர்கள்,வேலுநாச்சியார்,வ.உ.சி,சுப்பிரமணிய சிவா,வாஞ்சிநாதன் ,பாரதியார் என ஆங்கிலே ஏகாதியபத்திற்கு எதிராக,சுதந்திர போராட்ட களத்திலிருந்த  வீரர்கள் எண்ணிலடங்காதோர் தியாகங்களும் பெயர்களும் மறைபட்டுக்கிடக்கின்றன.அந்தந்த மாவட்டத்தில் ,பங்கெடுத்த வீரர்களின் உண்மையான வரலாற்றை கண்டறிந்து தமிழக அரசு வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழமக்களின் உணர்வாளா்கள் கோரிக்கைகள்எழுந்துள்ளன.


 

Share via