Advertiment
   “யாரும் கூட்டணி குறித்து பதிவு செய்யக் கூடாது” - நயினார் ஆர்டர்.      எஸ்டிபிஐ கட்சி திமுக அல்லது தவெகவுடன் கூட்டணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..      நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு, தனது எக்ஸ் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக இன்ஸ்டா பக்கத்த.      அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது எஸ்.டி.பி.ஐ. கட்சி. .      மலையாள நடிகர் டாம் சாக்கோ தமிழ்நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல். .      பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்.      இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10% வரை உயர்த்த வாய்ப்பு..      அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்.      கொலம்பியாவில் பரவும் மஞ்சள் காய்ச்சல்; சுகாதார அவசர நிலை அறிவிப்பு.      திருப்பதி: பார்க்கிங்கில் இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.      காஞ்சிபுரம்: அட்டை உற்பத்தி ஆலையில் தீ விபத்து.      சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் சுவாமி தரிசனம்.      சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனை..  

திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டிய இருவர்.

by Admin

தமிழர் உலகம்
திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டிய இருவர்.

 திருவள்ளுவர் தினத்தில் தமிழர்கள் நினைவு கொள்ள வேண்டிய இருவர்.ஒருவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.இன்னொருவர் பெருந்தச்சன் கணபதி ஸ்தபதியார்.மன்னர் காலத்தில் கோவில்களும் சிற்பங்களும் இறைவனையும் மன்னர்களையும் மட்டுமே  பிரதிபலித்தன.சிற்பிகள் கூட சிவனை வடித்த கை பெருமாளை வடிக்காது என்றும் பெருமாளை செதுக்கிய உளி சிவனை சிந்திக்காது என்றிருந்த காலங்களும் சமய பிடிப்புகளும் இருந்தது உண்டு.  அதனால்,இந்தியா முழுமைக்கும் இதுதான் நடைமுறை சட்டம்.இது கலைஞரின் ஆட்சியில் மாற்றம் கண்டது.ஓர் இலக்கியவாதி...இன்னொரு இலக்கிய பிதா மகனுக்கு சிறப்பு செய்ய முனைந்தார்.  கலைஞர் கருணாநிதியின்  கனவை சென்னை , நுங்கம்பாக்கத்தில்,அழகொளிரும் கலை பொக்கிஷமாக..,.மாமல்லபுர சிற்பங்களுக்கு இணையாக..  ஒரே கல்லில் வடித்துக்கொடுத்த  கலைஞன்...இந்திய பெருங்கடலில் எழுந்த சுனாமி கூட தீண்டி பார்க்கமுடியாத , தலைநிமிர்ந்து நிற்கும்  இலக்கிய கோமான் திருவள்ளுவரின்133   அடி உயர சிலையை.,கம்பீரமாக  வடித்தெடுத்த  சிற்பி  கணபதி.ஸ்தபதி.  அமெரிக்க சுதந்திர தேவியின் சிலை வடித்தவர்  பிரான்ஸ் நாட்டை சார்ந்த சிற்பி பற்றி காட்சி படுத்தப்பட்டருப்பது போல் தமிழரின் பாரம்பரிய சிற்பகலை உத்தியில் வள்ளுவரை வடித்தெடுத்த சிற்பியின் திறனை தமிழர் மட்டுமின்றி உலகமும் அறிந்திட வேண்டும்.

ராஜராஜ சோழனின் பெருமை  குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சனின் கலை படைப்பின் வெளிப்பாடான
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். சிற்பிக்கு அளித்த சிறப்பு மா மன்னனின் புகழ் மங்காது நின்று நிலைபெறுகிறது.
நம் நாட்டின்  சிறப்பே கலைகளில்தான் வாழ்கிறது.

Share via

More Stories