
சாதித்தவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்களே!
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வருகிறது. கொரனா தொற்று காரணமாகக்கட்டணம் கட்டிப்படிக்க வைக்க இயலாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளான வீட்டுப்பிள்ளைகள் இப்பொழுது மெட்ரிகுலேசன் மேகத்திலிரூந்து விடுக்கப்பட்டு,அரசு பள்ளிகளில் பயில படையெடுத்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயின்ற யாணவர்களுக்கு இடஒதுக்கீட்டு சலுகை இருப்பதாலும் உயர்கவ்விபெறுவதில் தடை இருக்காது என்கிற காரணத்தினாலும் அரசு பள்ளிகளின் முகம் புன்னகையுடன் மலர்ந்து கொண்டிருக்கிறது.நடப்புக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 53.24 லட்சத்தை தொட்டுள்ளது.கடந்த ஆண்டை விட இந்தாண்டு 6.73 லட்சம் மாணவர்கள் கூடுதலாகச்சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும் 3.93 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.ஆங்கிலம் போன்ற பிற மொழிகளை கற்றுக்கொள்வதில் எந்தவிதத்தடையுமில்லை.ஆனால்,நாம் தாய்மொழியை உதாசீனப்படுத்தி விட்டு பிற மொழிகளை நெஞ்சில் சுமப்பது என்பது தாய்மொழிக்குச்செய்யும் துரோகம்.தமிழ்த்தொன்மையான மொழி என்று பெருமை கொள்வதில் மட்டுமே நம் பங்களிப்பாக இருக்காமல்,நம்மொழி உலகம் முழுவதும் பரவி..செயல்பாட்டுக்கு வரும் நிலை உருவாக;உருவாக்க தமிழ்நெஞ்சங்கள் முன் வர வேண்டும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் நோபல் பரிசைபெற்றவ்களாக,ஜனாதிபதியாக பரிணமித்தருக்கிறார்கள். அதனால்,பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. கிட்டதட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இல்லை.அரசு பள்ளிகளில் படித்தவர்தான் பல்வேறு சாதனைகளைப்புரிந்திருக்கிறார்கள்.ஆங்கிலம் என்பது மொழிதானே தவிர அறிவன்று.தாய்ப்பாலுக்கும் கவர் பாலுக்கும் வித்தியாசம் புரிந்து நாம் நம் மொழியைப்போற்ற வேண்டும்.