Advertiment

மகனுடன் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா !

by Editor

விளையாட்டு
மகனுடன் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா !

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்ட ஹர்திக் பாண்ட்யா, தனது அதிரடியான ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். எனினும் இந்த தொடரில் அவரது ஆட்டம் பெரியளவில் இல்லை. ஒருசில சிக்ஸர் மட்டுமே விளாசிவிட்டு விரைவாக ஆட்டமிழந்து வருகிறார். அவர் ஃபார்மில் இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக உள்ளது.
 
ஹர்திக் பாண்ட்யா - நட்டாஷா ஸ்டான்கோவிக்குடன் கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். ஹர்திக் பாண்ட்யா - நட்டாஷா நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது அவர்களின் மகனின் புகைப்படத்தையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா மனைவி நட்டாஷா பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தனது மகன் அகஸ்தியா பாண்ட்யாவுடன் கொஞ்சி விளையாடுகிறார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவிற்கு கோடி கணக்கான பேர் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர்.

Share via