Advertiment

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

by Editor

ஆன்மீகம்
 சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களிழும்,கடலோர பகுதிகளிலும்  இன்று மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை முதல், 18ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும்,

வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும் என்றும்  சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம் 31; குறைந்தபட்சம் 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 45 கி.மீ., வேகம் வரை பலத்த காற்று வீசுகிறது. எனவே, 18ம் தேதி வரை மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

Share via

More Stories