Advertiment

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

by Admin

ஆன்மீகம்
இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை காலை 9:45 மணி முதல் 10 45க்குள் கோவில் கொடி மரத்தில் பத்து நாள் நடைபெறும்பங்குனி உத்திர திருவிழாவின் கொடி ஏற்றம் தொடங்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்கினை உத்திரம் மற்றும் பம்பை ஆற்றில் சுவாமிக்கு நடைபெறும் ஆராட்டு விழா ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் சன்னிதானம் 11 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு இருக்கும். சுவாமியை தரிசிக்க இருக்கும் பக்தர்கள் சபரிமலை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பம்பையில் உடனடி முன்பதிவு வசதியும் உள்ளது. பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் ஒன்றாம் தேதி முடிந்ததும் இரவு நடை சாத்தப்படும். அதனைத் தொடர்ந்து சித்திரை மாத பூஜை களுக்காக ஏப்ரல் பதினொன்றாம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

Share via