Advertiment

பண்பொழி அருள்மிகு  திருமலைக்கோவில் தெப்ப திருவிழா

by Editor

ஆன்மீகம்
பண்பொழி அருள்மிகு  திருமலைக்கோவில் தெப்ப திருவிழா

 கடையநல்லூர் அருகே உள்ள பண்பொழி அருள்மிகு  திருமலைக்கோவில் முத்துகுமாரசுவாமி கார்த்திகை கடைசி மாத சோமவாரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நடைபெற்றது. திரளான பக்தர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பண்பொழி அருள்மிகு திருமலைக்கோவில் குமாரசுவாமி திருக்கோவில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சோமவாரம் அன்று தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்  திருவிழா நேற்று இரவு  நடைபெற்றது. 

இந்நிலையில் திருமலைக்கோவிலிருந்து   இருந்து மதியம் புறப்பட்டு கிழே உள்ள நகரீஸ்வரமுடையார் திருக்கோவில் வந்தடைந்த நிலையில் திருக்கோவில் பால்,தயிர், இளநீர் , பன்னீர் உள்ளிட்ட பதினாறு வகையான அபிஷேகங்கள் நடந்தப்பட்ட பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்ட பின்னர் _ திருமலைக்குமாரசுவாமி தெப்பத் தேரில் எழுந்தருளிய பதினோறு (11) முறை தெப்பத்தை சுற்றி வலம் வந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் முருக என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்..

Share via

More Stories