108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்
படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 8 ம் நாளான இன்று
காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் முத்து கிரீடம், இரத்தின அபயஹஸ்தம் , அடுக்கு பதக்கம் , இரத்தின மகர ஹண்டிகை,முத்துச்சரம், திருவாபரணங்கள் அணிந்து திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் புடைசூழ புறப்பட்டுஅர்ஜுன மண்டபம் வந்தடைந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.