
இந்தியாவின் மூத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, சந்திரா தோமர். 89 வயதாகும் இவர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டில் வசித்து வந்தார். சந்திரா தோமர், தனது 60 வயதிற்கு மேல்தான் முதல்முறையாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார். முதியோருக்கான தேசிய அளவிலான பல போட்டிகளில் வெற்றி பெற்று, பலரின் கவனத்தை ஈர்த்தார்.
இவருக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து மீரட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சந்திரா தோமர் உயிரிழந்ததற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.