Advertiment

ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப ரூ.30,000 கோடி

by Editor

விளையாட்டு
ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப ரூ.30,000 கோடி

ஐபிஎல் தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்ப ரூ.30,000 கோடிக்கு ஏலம் விடுவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் அடுத்த சீசினில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இதனால் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் ஒளிப்பரப்பு உரிமம் பெறுவதற்கான ஏலத் தொகை ரூ.30,000 கோடி எட்டும் என பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.


கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரை சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. இதற்காக முதல் ரூ.460 கோடியும் அடுத்த ஆண்டு முதல் ரூ.900 கோடி வரை கொடுத்தது. அடுத்த வந்த ஸ்டார் நிறுவனம் கடந்த ஐந்தாண்டுக்கு ரூ.16,347 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.


இந்நிலையில் தற்போது ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அடுத்த 5 ஆண்டுகள் ஒளிபரப்புவதற்கான உரிமமம் ரூ.30,000 முதல் 40,000 கோடிக்கு ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை எடுக்க ஸ்டார் நிறுவனத்தை மற்ற முன்னணி நிறுவனங்களும் போட்டி போட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share via